உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சீரமைப்பு... சேதம்... ரிப்பீட்டு சுகாதார வளாகம் திறப்பு எப்போது?

சீரமைப்பு... சேதம்... ரிப்பீட்டு சுகாதார வளாகம் திறப்பு எப்போது?

திருவாலங்காடு:மணவூர் ஊராட்சியில் பாழடைந்த மகளிர் சுகாதார வளாகத்தை, ஊரக வளர்ச்சி துறை மூலம் சீரமைத்து, ஒன்பது மாதங்களான நிலையில், பயன்பாட்டிற்கு கொண்டு வராததால், மீண்டும் சேதமடையும் என, அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் ஊராட்சிக்கு உட்பட்ட காலனி பகுதியில், பழையனூர் சாலையில் 2014ம் ஆண்டு பெண்கள் சுகாதார வளாகம் கட்டடப்பட்டது. ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், 10 ஆண்டுகளாக பயன்பாடின்றி பாழடைந்தது. இந்நிலையில், 2023--- - 24ம் ஆண்டு தூய்மை பாரத திட்டத்தில், 6.50 லட்சம் ரூபாயில், கடந்த நவம்பர் மாதம் சீரமைக்கப்பட்டது. ஆனால், பயன்பாட்டிற்கு வராமல் ஒன்பது மாதமாக மீண்டும் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், 'பல லட்சம் ரூபாய் மதிப்பில் வளாகம் சீரமைத்து, பூட்டி வைக்கவா?' என, கேள்வி எழுப்பியுள்ளனர். மகளிர் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வராததால் பெண்கள், குழந்தைகள் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிப்பது தொடர்வதாகவும், இதனால் பெண்கள் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை