உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தேர்வாய்கண்டிகை கால்வாய் மீது உயரமான பாலம் அமைக்க கோரிக்கை

தேர்வாய்கண்டிகை கால்வாய் மீது உயரமான பாலம் அமைக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி:தேர்வாய்கண்டிகை சிப்காட் மற்றும் கிராமத்தை இணைக்கும் சாலையில் உள்ள பாலத்தை, உயரமாக அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி அருகே கண்ணன்கோட்டை -- தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கம் உள்ளது. நீர்த்தேக்கத்தின் அருகே தேர்வாய்கண்டிகை சிப்காட் மற்றும் கிராமத்தை இணைக்கும் சாலை பிரிகிறது. அந்த இடத்தில், கால்வாயின் மீது குறுகிய பாலம் உள்ளது. மழைக்காலத்தில், கால்வாயை மூழ்கடித்து 3 அடி உயரத்திற்கு மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அப்போது, இச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்படும். தொடர் மழைக்காலங்களில், கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும் உபரி நீர், தேர்வாய் கிராமத்திற்கு உட்பட்ட வயல்வெளியில் செல்வதால், மழை வெள்ளத்தில் பயிர்கள் மூழ்குவது தொடர்கதையாக உள்ளது. இச்சாலை வழியாக நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள், தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சென்று வருகின்றனர். எனவே, உயரமான இருவழி பாலம் அமைக்க வேண்டும். மழை வெள்ளம் விவசாய நிலங்களை பாதிக்காத வகையில், பாலத்தை ஒட்டி உயரமான கான்கிரீட் தடுப்புகள் அமைக்க நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி