அரசு பள்ளிக்கு செல்லும் மண்சாலை தார்ச்சாலையாக மாற்ற கோரிக்கை
திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி கிராமத்தில் அரசினர் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி மாநில நெடுஞ்சாலையில் இருந்து, அரை கிலோ மீட்டர் உள்ளதால் பள்ளிக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மண்சாலை வழியாக தான் தற்போது வரை நடந்து செல்கின்றனர்.மழை பெய்யும் போது, மண்சாலை முழுதும் சகதியாக மாறிவிடுகிறது. சாலையில் மழைநீர் தேங்கி விடுவதால் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமப்படுகின்றனர். மண்சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என ஆசிரியர்கள், பெற்றோர் பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.***