உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நீர்த்தேக்க தொட்டி சேதம் இடித்து அகற்ற கோரிக்கை

நீர்த்தேக்க தொட்டி சேதம் இடித்து அகற்ற கோரிக்கை

திருவள்ளூர்:கைவண்டூர் ஊராட்சியில், சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது, கைவண்டூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் மக்களுக்கு குடிநீர் வினியோகிக்க, தேசிய நெடுஞ்சாலையோரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு உள்ளது. அங்கிருந்து, குழாய் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் தொட்டி கட்டி, 30 ஆண்டுகளான நிலையில், தற்போது தொட்டியின் துாண் மற்றும் பக்கவாட்டுச் சுவர் சேதமடைந்து உள்ளது. கான்கிரீட் பெயர்ந்து இடியும் அபாய நிலையில் உள்ளது. எனவே, சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றி விட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ