உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தரைப்பாலத்தை விரிவாக்கம் செய்ய கோரிக்கை

தரைப்பாலத்தை விரிவாக்கம் செய்ய கோரிக்கை

ஆர்.கே.பேட்டை: தரைப்பாலத்தை விரிவாக்கம் செய்ய, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் சாலையில் ராஜாநகரம் அருகே ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தை ஒட்டி கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன்பாக மாற்றுப்பாதையில் மேம்பாலம் கட்டப்பட்டது. அந்த மேம்பாலத்திற்காக மாற்றுப்பாதையில் இணைப்பு சாலையும் ஏற்படுத்தப்பட்டு, பழைய சாலையும், தரைப்பாலமும் கைவிடப்பட்டது. புதிய மேம்பாலம் மாற்றுப்பாதையில் அமைக்கப்பட்டதால் அந்த பாதையில் திருப்பங்கள் அமைந்தன. இதனால் இந்த புதிய பாலத்தில் விபத்து அபாயம் நிலவுகிறது. அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பாலத்திற்கு இணையாக பழைய தரைப்பாலம் இருந்த பகுதியில் மற்றொரு புதிய பாலம் அமைத்து பாதையை நேராக அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை