உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்திற்கு மினி பஸ் இயக்க கோரிக்கை

ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்திற்கு மினி பஸ் இயக்க கோரிக்கை

ஆர்.கே.பேட்டை: ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்திற்கு போதிய பேருந்து வசதி இல்லாததால், மினி பேருந்து இயக்க வேண்டுமென, நெசவாளர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீகாளிகாபுரம், ஸ்ரீகாளிகாபுரம் காலனி, அமுதாரெட்டி கண்டிகை உள்ளிட்ட கிராமங்களில், 15 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். ஸ்ரீகாளிகாபுரத்திற்கு அரசு பேருந்து தடம் எண்: 65 இயக்கப்பட்டு வருகிறது. கூடுதல் பேருந்து வசதி இல்லாததால், இந்த கிராமங்களில் வசிப்பவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆர்.கே.பேட்டையில் இருந்து அம்மையார்குப்பம், சந்திரவிலாசபுரம், அப்புகொண்ட கண்டிகை, அமுதாரெட்டிகண்டிகை வழியாக ஸ்ரீகாளிகாபுரம், சோளிங்கர் வரை மினி பேருந்து இயக்கப்பட வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல், ஸ்ரீகாளிகாபுரத்தில் இருந்து சோளிங்கர், பரவத்துார் குருவராஜிபேட்டை, மின்னல், அரக்கோணம் வரையும் மினி பேருந்து இயக்கப்பட வேண்டும் என, நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், நெசவாளர்களும், விவசாயிகளும் தங்களின் உற்பத்தி பொருட் களை எளிதாக நகரங்களுக்கு கொண்டு செல்ல இயலும் என, தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை