உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் பள்ளம் சீரமைக்க கோரிக்கை

சாலையில் பள்ளம் சீரமைக்க கோரிக்கை

திருத்தணி:திருத்தணி நகரம் சித்தூர் சாலை சாய்பாபா நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு பிரதான சாலையில் கழிவுநீர் கால்வாய் மீது 3 ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்த தார்ச்சாலை ஒருவாரமாக சேதமடைந்து சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனை அறியாமல் இந்த வழியாக நடந்து செல்லும் மக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து தாமாக விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையில் விழுந்துள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி