உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புதுகும்மிடி - சிறுபுழல்பேட்டை சாலை அகலப்படுத்த கோரிக்கை

புதுகும்மிடி - சிறுபுழல்பேட்டை சாலை அகலப்படுத்த கோரிக்கை

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் இருந்து சிறுபுழல்பேட்டை கிராமம் வரையிலான, 3 கி-.மீ., சாலை, மாநில நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.இச்சாலையை புதுகும்மிடிப்பூண்டி, கரும்புகுப்பம், முத்துரெட்டிகண்டிகை, சிறுபுழல்பேட்டை கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இச்சாலையில், 15க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.குறுகலான, 3.75 மீட்டர் அகல சாலையில், கனரக வாகனம் ஒன்று சென்றால், எதிரெதிரே வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அந்த சமயங்களில், பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், தொழிலாளர்கள் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது.அதனால், இச்சாலையை, 5.5 மீட்டர் சாலையாக அகலப்படுத்தி, போக்குவரத்து சிக்கலில் இருந்து கிராம மக்கள் விடுபட, மாநில நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை