உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்விளக்குகள் பழுது குடியிருப்பு மக்கள் தவிப்பு

மின்விளக்குகள் பழுது குடியிருப்பு மக்கள் தவிப்பு

பொன்னேரி:தடப்பெரும்பாக்கம் குடியிருப்பு பகுதிகளில், மின்விளக்குள் பழுதாகி, சீரமைக்கப்படாமல் இருப்பதால், இரவு நேரங்களில் குடியிருப்பு மக்கள் தவித்து வருகின்றனர். மீஞ்சூர் ஒன்றியம் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில், கடந்த நான்கு மாதங்களாக, தெருவிளக்குகள் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இருக்கின்றன. 'பியூஸ்' போன பல்புகள் மாற்றப்படாமலும், சில தெருக்களில் குறைந்த வெளிச்சத்துடனும் இருப்பதால், இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகள் இருண்டு கிடக்கின்றன. பெண்கள் வெளியில் செல்வதற்கே அச்சம் அடைகின்றனர். இது குடியிருப்புவாசிகள், சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: உள்ளாட்சி அமைப்புகள் இருந்தவரை, வார்டு உறுப்பினர், தலைவர் ஆகியோரிடம் தெரிவிக்கும்போது, உடனுக்குடன் அவை சரிசெய்யப்படும். தற்போது அதிகாரிகளை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. புகார் தெரிவித்தாலும், நடவடிக்கையும் எடுப்பதில்லை. தெருக்களில் பழுதாகி இருக்கும் மின்விளக்குகள் மற்றும் வேண்பாக்கம், தடப்பெரும்பாக்கம், சிங்கிலிமேடு உட்பட, ஐந்து இடங்களில் செயல்பாடு இன்றி கிடக்கும் உயர் கோபுர விளக்குகள் ஆகியவற்றை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை