உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தடுப்பணையில் சேரும் கழிவுநீர் காக்களூர்வாசிகள் கடும் அதிருப்தி

தடுப்பணையில் சேரும் கழிவுநீர் காக்களூர்வாசிகள் கடும் அதிருப்தி

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், காக்களூர் கிராமத்தின் தெற்கில், நொச்சிலி காப்புக்காடு உள்ளது. வடக்கில் பொதட்டூர்பேட்டை ஏரிய அமைந்துள்ளது.கடல் போல் பரந்து விரிந்துள்ள பொதட்டூர்பேட்டை ஏரிக்கு, ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்ட நீர்பிடிப்பு பகுதியில் இருந்து நீர்வரத்து உள்ளது. நொச்சிலி காப்புக்காடு மற்றும் பொதட்டூர்பேட்டை ஏரியின் நீர்வளத்தால், காக்களூரின் வடக்கு பகுதியில் உள்ள நீர்வரத்து கால்வாயில் தண்ணீர் பாய்கிறது. இந்த கால்வாய்க்கு இணையாக மற்றொரு வரத்து கால்வாயும் அமைந்துள்ளது. இந்த வரத்து கால்வாயில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, தற்போது பராமரிப்பு இன்றி இடிந்து கிடக்கிறது. இதை மேலும் சீரழிக்கும் விதமாக, காக்களூரில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய், இந்த தடுப்பணைக்கு எதிரே 100 அடி துாரத்தில் இணைகிறது. தடுப்பணை கட்டப்பட்டது, நீர்வரத்து காய்வாயில் தண்ணீரை தேக்கவதற்கா அல்லது கழிவுநீரை தேக்கி வைப்பதற்காக என, பகுதிவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.எனவே, அதிகாரிகள் தலையிட்டு, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை