உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடிநீர் தொட்டி அமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை

குடிநீர் தொட்டி அமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் ஜாகீர்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது, அருந்ததியர் காலனி. இங்கு, 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இப்பகுதிவாசிகளின் குடிநீர் தேவைக்காக, ஜாகீர்மங்கலம் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து, 1 கி.மீ., தூரத்திற்கு குழாய் அமைக்கப்பட்டு, தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.அவ்வப்போது, குடிநீர் வழங்கும் குழாய்களில் பழுது ஏற்படுவதும், குடிநீர் தடைபடுவதும் தொடர்கிறது. இதனால், பகுதிவாசிகள் பல நாட்கள் குடிநீரின்றி சிரமப்படுவதாக கூறுகின்றனர்.எனவே, அருந்ததியர் காலனியில் குடிநீர் தொட்டி அமைக்கவும், சீரான குடிநீர் வினியோகம் கிடைக்கவும், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை