அரசு போக்குவரத்து பணிமனையில் ஒய்வறை திறப்பு
திருத்தணி,:திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் மொத்தம், 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் தொழிற்நுட்ப அலுவலர்கள் ஓய்வு எடுப்பதற்கு போதிய இடவசதியின்றி சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து ஊழியர்கள் கோரிக்கை ஏற்று போக்குவரத்து பணிமனை நிர்வாகம், பணிமனை வளாகத்தில் ஒய்வெடுக்கும் அறை ஏற்படுத்தப்பட்டது. இதன் திறப்பு பணிமனை மேலாளர் தேவன் தலைமையில் நடந்தது. இதில் திருத்தணி தி.மு.க., எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று, ஊழியர்கள் ஒய்வறையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.