உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம்

வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம்

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலக வாயிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த் துறையில் காலி பணியிடங்களை நிரப்புதல், ஊழியர்களின் பணி பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதில் பேசியவர்கள், உங்களுடன் ஸ்டாலின் முகாம், மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் பெறுதல் உள்ளிட்ட பணிகளால் சுமை அதிகரித்து உள்ளது. இதனால் வழக்கமான பணிகள் பாதிக்கிது' என்றனர். திருத்தணி தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில், நேற்று ஆர்பாட்டம் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்று, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக பணியிடங்கள் நிரப்ப வேண்டும். ' உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனுக்களை முடிவு செய்திட போதிய கால அவகாசம் வேண்டும். கருணை அடிப்படை பணி நியமனம் உச்சவரம்பு, 5 சதவீதம் ஆக குறைக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும், ஜூலை 1ம் தேதி 'வருவாய்த்துறை தினமாக' அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !