உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நந்தியாற்றில் கழிவுநீர் கலப்பு குடிநீர் மாசுபடும் அபாயம்

நந்தியாற்றில் கழிவுநீர் கலப்பு குடிநீர் மாசுபடும் அபாயம்

திருத்தணி,:திருத்தணி நகராட்சியில், புதிய சென்னை சாலை அருகே நந்தியாறு செல்கிறது. இந்த ஆறு, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே உருவாகி வெங்குப்பட்டு, ஜனகாபுரம் வழியாக திருவள்ளூர் மாவட்டம் செருக்கனுார், திருத்தணி வழியாக கொசஸ்தலை ஆற்றில் கலந்து, பூண்டி ஏரிக்கு செல்கிறது.இந்நிலையில், திருத்தணி நகராட்சி, முருகப்ப நகர், குமரன் நகர் மற்றும் காந்திரோடு, பழைய, புதிய சென்னை சாலை ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நந்தியாற்றில் நேரடியாக கலக்கிறது. இதனால், ஆற்றில் செல்லும் தண்ணீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நந்தியாற்றில் விடப்படும் கழிவுநீரை நேரிடையாக விடாமல், தண்ணீரை சுத்திகரித்து ஆற்றில் விட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை