பள்ளிப்பட்டில் மின்தடையை கண்டித்து சாலை மறியல்
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு சுற்றுப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை, சூறாவளியுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழையால் பாதுகாப்பு கருதி, பள்ளிப்பட்டு அடுத்த, கொளத்துார் துணை மின்நிலையத்தில் மின்வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இதனால் பள்ளிப்பட்டில், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மின்வினியோகம் தடைபட்டிருந்தது.இதனால் அதிருப்தி அடைந்த ஆஞ்சநேயா நகர் பகுதிவாசிகள், நகரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிப்பட்டு போலீசார், அவர்களை சமதானம் செய்து அனுப்பி வைத்தனர்.அதை தொடர்ந்து, இரவு 10:30 மணியளவில், பள்ளிப்பட்டில் மின்வினியோகம் சீரடைந்தது.