உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின் வெட்டை கண்டித்து சாலை மறியல்

மின் வெட்டை கண்டித்து சாலை மறியல்

ஊத்துக்கோட்டை: தொடர் மின்வெட்டை கண்டித்து, அக்கரப்பாக்கம் கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையின் இடதுபுறம் செல்லும் சாலையில் உள்ளது அக்கரப்பாக்கம் கிராமம். இங்கு, 1,000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சில தினங்களாக, அக்கரப்பாக்கம் கிராமத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டு நிலவுவதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, வடமதுரை துணை மின் நிலையத்திற்கு புகார் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அக்கரப்பாக்கம் கிராம மக்கள், நேற்று முன்தினம் இரவு, திடீரென சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், கன்னிகைப்பேர் ஏரிக்கரை அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சு நடத்தினர். அப்போது, ‘மின் வாரிய உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, உடனடியாக மின் வெட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என, போலீசார் உறுதியளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட அக்கரப்பாக்கம் கிராம மக்கள், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை