உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஜல்லி கற்களாக மாறிய சாலை மாணவர்கள் கடும் அவஸ்தை

ஜல்லி கற்களாக மாறிய சாலை மாணவர்கள் கடும் அவஸ்தை

கடம்பத்துார்:மப்பேடு - சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, கடம்பத்துர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழச்சேரி ஊராட்சி. இங்குள்ள பேருந்து நிலையம் அருகே மப்பேடு செல்லும் ஒன்றிய சாலை உள்ளது.இந்த சாலை மிகவும் சேதமடைந்து, கற்கள் பெயர்ந்து பல்லாங்குழியாக மாறியுள்ளது. மேலும், மழைக்காலங்களில் சிறு குளம் போல் மாறி வருவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த சாலை வழியே கீழச்சேரியில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று வரும் மப்பேடு பகுதியைச் சேர்ந்த மாணவ - மாணவியர் நடந்து கூட செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.இதுகுறித்து, மப்பேடு ஊராட்சி சார்பில் பலமுறை புகார் அளித்தும், ஒன்றிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் மற்றும் மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை