உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையோர புதர்கள் அகற்றம்

சாலையோர புதர்கள் அகற்றம்

ஆர்.கே.பேட்டை:அம்மையார்குப்பத்தில் இருந்து தியாகாபுரம் வழியாக சித்துார் செல்லும் சாலையில் வீரமங்கலம் கூட்டு சாலை வரை சாலையோர புதர்கள், இயந்திரம் வாயிலாக அகற்றப்பட்டு வருகின்றன.ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பத்தில் இருந்து தியாகாபுரம் வழியாக ஆந்திர மாநிலம் சித்துாருக்கு தார் சாலை வசதி உள்ளது. இதில், வீரமங்கலம் கூட்டு சாலை வரையிலான பகுதியில், சாலையோர புதர்களை நவீன இயந்திரம் கொண்டு அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.இதற்காக பிரத்யேக புல்வெட்டும் இயந்திரம், டிராக்டரில் இணைக்கப்பட்டு, புதர்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி