வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது
பொன்னேரி:பொன்னேரி அடுத்த வெள்ளோடை, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், இரவு நேரங்களில் பணிக்கு செல்லும் தொழிலாளர்களை வழிமடக்கி, பணம் வழிப்பறி செய்யப்படுவதாக, பொன்னேரி போலீசாருக்கு புகார்கள் வந்தன.நேற்று முன்தினம் இரவு, தனியார் தொழிற்சாலை ஊழியர் ஒருவரை வழிமடக்கி, 1,500 ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டது.இதுகுறித்த புகாரின்படி, பொன்னேரி அடுத்த தேவம்மா நகரைச் சேர்ந்த மகேஷ், 27, என்பவரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.