உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / எஸ்.பி., அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

எஸ்.பி., அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

திருவள்ளூர்:திருத்தணி அடுத்த பாப்பிரெட்டிபள்ளியைச் சேர்ந்தவர் பாலாஜி, 22. ஐ.டி.ஐ., முடித்துவிட்டு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர், தன்னுடன் பள்ளிப் பருவத்தில் படித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி, 21, என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பர் என்பதால், கடந்த மார்ச் மாதம் திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் செய்து முறைப்படி பதிவும் செய்தனர். பின், 'அலைபாயுதே' பட பாணியில், இருவரும் அவரவர் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், புவனேஸ்வரி வீட்டில் சந்தேகம் ஏற்பட்டதால், தங்களை பிரித்து விடுவர் என்ற அச்சத்தில் பாலாஜி, புவனேஸ்வரி ஆகிய இருவரும், நேற்று முன்தினம் இரவு திருவள்ளூர் எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து, எஸ்.பி., சீனிவாச பெருமாள் உத்தரவின்படி, திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி, இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சு நடத்தி, பெற்றோர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி