உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கூரையில்லாத கழிப்பறை நுாற்றாண்டு பள்ளியின் அவலம்

 கூரையில்லாத கழிப்பறை நுாற்றாண்டு பள்ளியின் அவலம்

ஊத்துக்கோட்டை: நுாற்றாண்டு கடந்த அரசு தொடக்கப் பள்ளி கழிப்பறையில் கூரை இல்லாததால், மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அரசு தொடக்கப் பள்ளி கடந்த, 1908ம் ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயில்கின்றனர். பள்ளி வளாகம் தனியார் பள்ளிக்கு இணையாக சுத்தம், சுகாதாரத்துடன்பராம ரிக்கப்படுகிறது. இங்கு மாணவர்கள், மாணவியருக்கு தனித்தனியாக கழிப்பறை உள்ளது. ஆனால் கூரை இல்லை. இதனால் மழைக்காலங்களில் மாணவ, மாணவியர் கழிப்பறை செல்ல முடியாத நிலை ஏற்ப டுகிறது. கடந்தாண்டு, 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற முகாம் சார்பில், அப்போதைய திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் பெரியபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் தங்கினார். அப்போது கழிப்பறைக்கு கூரை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, உடனடியாக தீர்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து கூரை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து பணிக்கான டெண்டர் விடப்பட்டது. ஆனால் இதுவரை பணி துவங்கவில்லை. எனவே கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அரசு பள்ளியில் கழிப்பறைக்கு கூரை அமைக்க வேண்டும் என, மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ