உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / செடியிலேயே அழுகிய பூக்கள்

செடியிலேயே அழுகிய பூக்கள்

திருவாலங்காடு: தொடர் மழையால் பூக்களை பறிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், அவை செடியிலேயே அழுகி வீணாகின. திருவாலங்காடு அடுத்த வேணுகோபாலபுரம், பகவதிபட்டாபிராமபுரம், புளியங்குண்டா, காட்ராயகுண்டா, அதை சுற்றியுள்ள, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், விவசாயிகள் அதிகளவில் சாமந்தி, சம்பங்கி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூ வகைகளை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில், 'மோந்தா' புயலால், சில நாட்களாக பெய்த மழையால் விவசா யிகள் பூக்களை பறிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், செடியிலேயே பூக்கள் அழுகி வீணாகின. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை