மேலும் செய்திகள்
முன்னாள் படை வீரர்கள் வாரிசுக்கு உதவி
26-Sep-2024
திருவள்ளூர்:முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தொழில் துவங்கி, 33 சதவீதம் மானியத்துடன் தொழில் கடன் வழங்கப்படும்.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:முதல்வரின் 'காக்கும் கரங்கள்' என்ற திட்டத்தின் கீழ், முன்னாள் படைவீரர்கள் தொழில் துவங்க 1 கோடி ரூபாய் வரை வங்கி கடன் பெறலாம்.இத்திட்டத்தின் மூலம் துவக்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில், 30 சதவீதம் மூலதன மானியம், 3 சதவீதம் வட்டி மானியமும் கிடைக்கும்.இவர்களுக்கு திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி போன்ற தேவையான பயிற்சி, தமிழக அரசால் வழங்கப்படும். எனவே, ராணுவ பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் மனைவியர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 044 - -2959 5311 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
26-Sep-2024