உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பைக் கவரில் இருந்த ரூ.60,000 அபேஸ்

பைக் கவரில் இருந்த ரூ.60,000 அபேஸ்

திருத்தணி:பைக் டேங்க் கவரில் வைத்திருந்த 60,000 ரூபாயை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். திருத்தணி ஒன்றியம் சத்திரஞ்ஜெயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன், 36. இவர், கடந்த 12ம் தேதி திருத்தணி மா.பொ.சி., சாலையில் உள்ள வங்கிக்கு சென்று, ரூ.60,000 மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து, 100 ரூபாய் நோட்டுக்களாக மாற்றியுள்ளார். பின், அந்த பணத்தை பைக்கின் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துவிட்டு வீட் டிற்கு சென்றார். திருத்தணி பைபாஸ் சாலை அருகே பைக்கை நிறுத்தி, கடைக்கு பொருட்கள் வாங்கி விட்டு வந்து பார்த்த போது, பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி