மேலும் செய்திகள்
வேளாங்கண்ணியிலும் சிறப்பு பாதை: உதயநிதி
28-Oct-2024
பழவேற்காடு:கடந்த 2008ல் மும்மை கடல் வழியாக வந்த தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து, ஆண்டுதோறும், 'சாகர் கவாச்' தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.இந்த ஆண்டிற்கான இரண்டு நாள் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி, நேற்று காலை துவங்கியது. பழவேற்காடு கடல் பகுதியிலும், இந்நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமம், தமிழ்நாடு காவல்துறை, கப்பற்படை ஆகிய துறைகள் பங்கேற்றன. தீவிரவாதிகள் போர்வையில் வரும் பாதுகாப்பு படையினரை, கடற்கரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் குழுவினர் பிடிப்பது போன்று ஒத்திகை நடைபெற்றது.இதற்காக பழவேற்காடு, காட்டுப்பள்ளி கடற்கரை பகுதிகளிலும், கலங்கரை விளக்கம், எண்ணுார் காமராஜர் மற்றும் அதானி துறைமுக பகுதிகளிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.நேற்று காலை கடல் வழியாக தீவிரவாதிகள் போல் வேடமணிந்து, படகில் வந்த எட்டு பேர் கொண்ட இரு குழுவை, கடற்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட குழுவினர் மடக்கி பிடித்தனர். இந்த பாதுகாப்பு நிகழ்ச்சி, இன்று மாலை வரை நடைபெறுகிறது.பழவேற்காடு கடற்கரை, பஜார் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்ததால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
28-Oct-2024