உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நான்காவது புத்தக கண்காட்சியில் ரூ.52 லட்சத்திற்கு விற்பனை

நான்காவது புத்தக கண்காட்சியில் ரூ.52 லட்சத்திற்கு விற்பனை

திருவள்ளூர்:திருவள்ளூரில் நடந்து முடிந்த நான்காவது புத்தக கண்காட்சியில், 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில் நான்காவது புத்தக கண்காட்சி, கடந்த 7ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, 11 நாட்கள் நடைபெற்ற இக்கண்காட்சியில், 115 'ஸ்டால்கள்' இடம்பெற்றிருந்தன. தினமும் காலை, மாலை பள்ளி மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு, சிந்தனை அரங்கத்தில், பல்வேறு பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்று பேசினர்.இதுகுறித்து கலெக்டர் பிரதாப் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த நான்காவது புத்தக கண்காட்சியில், 50,000க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் லட்சக்கணக்கானோர் பார்வையிட்டனர். இந்த புத்தக கண்காட்சியில், 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான வரலாறு, இலக்கியம், சிறுவர்களுக்கான புத்தகம் போன்ற பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன.திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து எழுதிய புத்தகங்கள், ஆதிதிராவிடர் நல கல்லுாரி மாணவியர் விடுதி, அமிர்தாபுரம் அரசு உயர்நிலை பள்ளிக்கும், ஆண்டார்குப்பம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் நூலகத்திற்கும் வழங்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.உடன், தென்னிந்திய பதிப்பாளர் சங்க செயலர் முருகன், ஆவடி மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை