மேலும் செய்திகள்
மணல் கடத்திய வேன் பறிமுதல்
09-Nov-2024
திருத்தணி:திருத்தணி அடுத்த வி.கே.ஆர்.புரம் கிராமம் அருகே செல்லும் ஏரி மற்றும் ஓடைகளில் மணல் அரசு அனுமதியின்றி அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருத்தணி போலீசார் நேற்று சிறுகுமி கூட்டுச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த டிராக்டரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி ஒரு யூனிட் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு, 9,500 ரூபாய். தொடர்ந்து போலீசார் மணல் கடத்தி வந்த பொந்தாலகண்டிகை சேர்ந்த, எத்திராஜ், 45 என்பவரை கைது செய்தனர்.
09-Nov-2024