உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / துாய்மை பணியாளர் குறைதீர் கூட்டம்

துாய்மை பணியாளர் குறைதீர் கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது திங்கட்கிழமை, துாய்மை பணியாளர் குறைதீர் கூட்டம் நடைபெறும் என, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில், துாய்மை பணியாளர்களுக்கான குறைதீர் கூட்டம், கலெக்டர் தலைமையில் ஒவ்வொரு மாதம் மூன்றாவது திங்கட்கிழமை பகல் 12:00 - 1:00 மணி வரை நடைபெறும். இக்கூட்டத்தில், துாய்மை பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்து, அதற்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இக்கூட்டத்தில், ஆவடி கமிஷனர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், நகராட்சி ஆணையர், உதவி இயக்குநர், ஊராட்சி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் தவறாமல் ப ங்கேற்க வேண்டும். மேலும், அவர்கள் கட்டுப்பாட்டின்கீழ் பணிபுரியும் துாய்மை பணியாளர்களையும், தவறாமல் கூட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும். இவ்வாறு கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை