விஷப்பூச்சி கடித்து காவலாளி உயிரிழப்பு
திருவள்ளூர்:திருவள்ளூர் வள்ளுவர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பரசிவன், 53. இப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார்.கடந்த 1ம் தேதி பணிக்கு சென்றவர் விஷபூச்சி கடித்து விட்டதாக 2ம் தேதி காலை திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். 3ம் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து சென்னை ஓமந்துாரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.இதுகுறித்து திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.