உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெட்டி கடையில் பெட்ரோல் பறிமுதல்

பெட்டி கடையில் பெட்ரோல் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி:தீபாவளியை முன்னிட்டு, உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதியின்றி எளிதில் தீப்பற்ற கூடிய எரிபொருள் மற்றும் பட்டாசு விற்பனைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாச பெருமாள் உத்தரவு பிறப்பித்தார்.அதன்படி, ஆரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். கும்மிடிப்பூண்டி அடுத்த ஓபசமுத்திரம் கிராமத்தில், பெட்டி கடை ஒன்றில் விற்பனைக்கு வைத்திருந்த, 5 லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்தனர்.வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், பெட்டி கடையின் உரிமையாளரான, ஓபசமுத்திரத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி, 42, என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை