உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் பக்தர்கள் தங்க விடுதி கட்ட இடம் தேர்வு

திருத்தணியில் பக்தர்கள் தங்க விடுதி கட்ட இடம் தேர்வு

திருத்தணி,: திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உள்பட, அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து, மூலவர் முருக பெருமானை வழிப்பட்டு செல்கின்றனர். இந்நிலையில், முருகன் மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்வதற்கு ஒரே ஒரு மலைப்பாதை இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், கோவில் நிர்வாகம் மேல்திருத்தணி பகுதியில் உள்ள முருகன் மலைக்கோவிலுக்கு, 25 கோடி ரூபாயில் மாற்றுப் பாதை ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம், முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக, புதிதாக விடுதிகள் கட்டுவதற்கு தீர்மானித்து அதற்கான பணியில் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் உயர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.அதற்கான இடம் தேர்வு செய்வதற்கு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், திருத்தணி கோட்டாட்சியர் தீபா சுற்றுலா வளர்ச்சி கழக உதவி செயற்பொறியாளர் ரமேஷ் ஆகியோர், மேல்திருத்தணி, முருகன் கோவிலுக்கு அருகே மாற்றுப்பாதை அமைய உள்ள நல்லாண்குண்டா பகுதியில், 5 ஏக்கர் அரசு நிலத்தை பார்வையிட்டனர். விரைவில் அரசு அனுமதியுடன் விடுதிகள் கட்டுவதற்காக பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுற்றுலா துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை