உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  செல்லியம்மன் கோவில் குளம் கழிவுநீர் குட்டையான அவலம்

 செல்லியம்மன் கோவில் குளம் கழிவுநீர் குட்டையான அவலம்

ஆரணி: சிறுவாபுரி செல்லியம்மன் கோவில் குளத்தில் ஆகாய தாமரை படர்ந்து, கழிவுநீர் குட்டையாக மாறியதால். கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர். சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட சிறுவாபுரியில், செல்லியம்மன் கோவில் உள்ளது. அதனருகே, பரந்து விரிந்த கோவில் குளம் உள்ளது. இக்குளம் சாலையோரம் இருப்பதால், கழிவுகள் தாராளமாக கொட்டப்பட்டு வருகின்றன. சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அங்குள்ள நுாற்றுக்கணக்கான கடைகள், உணவகங்களின் கழிவுகள் மற்றும் கழிவுநீர் குளத்தில் கலக்கின்றன. இதனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன் வரை அழகிய குளமாக இருந்த இக்குளம், தற்போது கழிவுநீர் குட்டையாக மாறி இருப்பதை கண்டு, கிராம மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். கழிவுகள் கொட்டுவதை தடுத்து, முறையாக கழிவுகளை சேகரிக்க துாய்மை பணியாளர்களை நியமிக்க, சோழவரம் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி