உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காலநிலை மாற்றம் குறித்து மீன்வள கல்லூரியில் கருத்தரங்கு

காலநிலை மாற்றம் குறித்து மீன்வள கல்லூரியில் கருத்தரங்கு

பொன்னேரி, பொன்னேரி, டாக்டர் எம்.ஜி.ஆர்., மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு கல்லுாரி முதல்வர் ஜெயசகிலா தலைமையில் நடந்தது.இதில், தமிழ்நாடு காலநிலை மாற்ற திட்டத்தின் உதவி இயக்குனர் மற்றும் இந்திய வனப்பணி அதிகாரி விவேக் குமார் பி யாதவ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். காலநிலை மாற்றத்தால் குழந்தைகள், இளைஞர்கள், முதியோர் மத்தியில் ஏற்படும் தாக்கங்கள் பற்றி அவர் பேசினார்.அதை தொடர்ந்து, கல்லூரி முதல்வர் ஜெயசகிலா, முதன்மை விஞ்ஞானி முனைவர் அரித்ராபேரா, முனைவர்கள் மாரிமுத்து, எஸ்.சிவராஜ், ஸ்ரீஹரி, ஜெயபிரகாஷ் ஆகியோர் காலநிலை மாற்றத்தால், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் மீன்வளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அதற்கான தீர்வுகள் குறித்து பேசினர்.கல்லுாரி மாணவர்களுக்கு காலநிலை சம்பந்தமான வினாடி- வினா போட்டி நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அறிவியல் இயக்க திருவள்ளூர் மாவட்ட செயலர் ஜெயநாராயணா, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ