உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாலிபர் கொலை வழக்கில் சிறுவன் உட்பட ஏழு பேர் கைது

வாலிபர் கொலை வழக்கில் சிறுவன் உட்பட ஏழு பேர் கைது

கடம்பத்துார், கடம்பத்துார் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி, வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். கடம்பத்துார் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் மகன் ராஜ்கமல், 20. என்பவர் கடந்த 30ம் தேதி இரவு வைசாலி நகர் பகுதியில் மர்ம கும்பலால் வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செவ்வாப்பேட்டை அடுத்த தண்ணீர்குளம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட ஆவடி மாநகர போலீசார் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றிக் கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் கடம்பத்துாரில் நடந்த ராஜ்கமல் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து ஆவடி மாநகர போலீசார் ஏழு பேரையும் பிடித்து கடம்பத்துார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கடம்பத்தூர் மேட்டு தெரு சீனிவாசன், 18, அஷ்டலஷ்மி நகரைச் சேர்ந்த ஹரிபிரசாத், 19, நாதன், 19, ஜெய்நகர் உஸ்மான், 20 செஞ்சிபானம்பாக்கம் நெல்சன், 20, புதுமாவிலங்கை கார்த்திக், 21 மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் நாட்டுவெடிகுண்டு வீசி ராஜ்குமாரை கொலை செய்தவர்கள் என, தெரிய வந்தது. ஆவடி மாநகர போலீசார் நடத்திய விசாரணையில் தப்பியோடும் போது கார்த்திக் என்பவருக்கு இடது காலிலும், சீனிவாசன், ஹரி பிரசாத் ஆகிய இருவருக்கும் வலது கையிலும் காயம் ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது. கடம்பத்தூர் மேல்பகுதி இளைஞர்களுக்கும் கீழ்பகுதி இளைஞர்களுக்கும் இடையே யார் கெத்து என்ற போட்டி இருந்ததாகவும், இதில் நாங்கள் தான் கெத்து என நிரூபிப்பதற்காக நாட்டு வெடிகுண்டு வீசியும் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர் இதையடுத்து கடம்பத்துார் போலீசார் ஆறு பேரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். சிறுவனை கெல்லீஸ் சீர்த்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர். ---------------- --------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை