உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிழற்குடை முன் கழிவுநீர் நோய் பரவும் அபாயம்

நிழற்குடை முன் கழிவுநீர் நோய் பரவும் அபாயம்

திருமழிசை: திருமழிசை பேரூராட்சியில் கழிவுநீர் சூழ்ந்த நிழற்குடையால், பயணியர் மற்றும் பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திருமழிசை பேரூராட்சியில், சென்னை -- பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பயணியர் நிழற்குடையை, இப்பகுதி மக்கள் பயன்படுத்தி, திருவள்ளூர், திருத்தணி சென்று வருகின்றனர். இப்பகுதியில் முறையாக கழிவுநீர் கால்வாய் இல்லாததால், சில நாட்களாக மழை பெய்த நிலையில், பயணியர் நிழற்குடை முன் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், அருகிலுள்ள வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், மழைநீருடன் தேங்கி குளம்போல் மாறியுள்ளது. இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணி யர் கடும் சிரமப்பட்டு வருவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, நிழற்குடையை சூழ்ந்துள்ள கழிவுநீரை அகற்றி, கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி