ஊத்துக்கோட்டையில் காட்சி பொருளான சிக்னல்
ஊத்துக்கோட்டை, தமிழக - ஆந்திர எல்லையில் உள்ளது ஊத்துக்கோட்டை பேரூராட்சி. சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருவள்ளூர் - சத்தியவேடு மாநில நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கும் பகுதியில் உள்ளது.இரண்டு பக்க சாலையிலும், தினமும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இதனால் இப்பகுதி போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ளன. அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நான்கு ஆண்டுகளுக்கு முன் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டது.ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில், திருவள்ளூர், சத்தியவேடு, நாகலாபுரம், சென்னை செல்லும் பகுதிகளில் நான்கு இடங்களில் சிக்னல் அமைக்கப்பட்டது. இதுவரை சிக்னல் இயக்கப்படாத நிலையில், சத்தியவேடு சாலையில் உள்ள சிக்னல் கம்பம் திடீரென கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.எனவே, ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் உள்ள தானியங்கி சிக்னலை இயக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.