உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரேஷன் கடைகளில் சிக்னல் பிரச்னை பணியாளர்கள், பகுதிவாசிகள் அதிருப்தி

ரேஷன் கடைகளில் சிக்னல் பிரச்னை பணியாளர்கள், பகுதிவாசிகள் அதிருப்தி

ஆர்.கே.பேட்டை:ரேஷன் கடைகளில் 'பயோ மெட்ரிக்' முறைப்படி, ரேஷன் கார்டுதாரர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், இலவச அரிசி மற்றும் சலுகை விலையில் வழங்கப்படும் சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் வாங்க கூட்டம் அலைமோதும். இந்நிலையில், 'பயோ மெட்ரிக்' கருவிகளுக்கு சிக்னல் கிடைக்காமல் பணியாளர்கள் அவதிப்படுகின்றனர். இதனால், வரிசையில் காத்திருக்கும் நுகர்வோர்கள் அதிருப்தி அடைகின்றனர். சிக்னல் கிடைத்தாலும், ஒரு சிலருக்கு கைரேகை ஸ்கேன் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.எளிதில் கைரேகை ஸ்கேன் ஆகாமல் மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், வரிசையில் காத்திருப்போர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும், பயோ மெட்ரிக் கருவிக்கு சிக்னல் கிடைக்கும் இடத்திற்கு கொண்டு சென்று பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் பணியாளர்கள் புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை