மேலும் செய்திகள்
ஸ்கூட்டரில் லாரி மோதி தம்பதி படுகாயம்
22-Aug-2025
திருவாலங்காடு:விவசாயிகள், வியாபாரிகள் நலனை கருத்தில் கொள்ளாத தேசிய நெடுஞ்சாலை துறையினரின் பணிகளை கண்டித்துகனகம்மாசத்திரம் பஜாரில், 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று கையெழுத்து இயக்கம் நடத்தினர். கனகம்மாசத்திரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இப்பணி தற்போது 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கனகம்மாசத்திரம் செல்லும் சாலையில் இடைவெளி விடாமல் டிவைடர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கனகம்மாசத்திரம் நகரத்தின் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் கனகம்மாசத்திரம் நகர வாழ்விடத்தை பாதுகாத்திட வேண்டும். சுற்றியுள்ள 20 கிராம மக்களின் போக்கு வரத்தை உறுதி செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள், வியாபாரிகள் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் நடவடிக்கையை கண்டித்து நேற்று கனகம்மாசத்திரம் பஜாரில் ஊர்வலமாக சென்று கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் பெருமாள், மாவட்ட செயலர் ஸ்ரீநாத், மற்றும்ஆட்டோ தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
22-Aug-2025