| ADDED : பிப் 20, 2024 10:27 PM
கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை அகற்றும் பணியை துப்புரவு பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் பல ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் ஊராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பை நெடுஞ்சாலையோரம் எரித்து வருகின்றனர். இதனால், ஏற்படும் புகையால், அவ்வழியே வாகனங்களில் செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், சாலையோரம் குப்பையை எரிக்கக் கூடாது என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும், ஊராட்சி பகுதிகளில் சாலையோரம் குப்பை எரிப்பது தொடர்கதையாகவே நடந்து வருகிறது.