உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு

குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு

மணவாள நகர், மணவாள நகர் அரசு பள்ளியில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, உணவுடன் கூடிய மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.திருவள்ளூர் அடுத்த, மணவாள நகரில், கே.இ.என்.சி., மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, பிளஸ் 2 வரை மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். தற்போது, பத்தாம் வகுப்பில், 212 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.கடந்த அரையாண்டு தேர்வில், தேர்வு எழுதிய மாணவர்களில், 60 பேர் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தனர். இதையடுத்து, பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறும் வகையில், மாலை நேர சிறப்பு வகுப்பு துவங்கி உள்ளது.இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகரன் கூறியதாவது:பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள், அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில், கல்வி பயின்று வருகின்றனர். 2017ம் ஆண்டு முதல், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு, அரையாண்டு பொதுத்தேர்வில் 60 பேர் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளனர். இதையடுத்து, அவர்களுக்கு தினமும் மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை சிறப்பு வகுப்பு துவக்கப்பட்டு உள்ளது.அதில், ஒவ்வொரு நாளும் ஒரு பாடம் என்ற வகையில், பள்ளி ஆசிரியர்கள் சிறப்பு வகுப்பு நடத்துவர். மாலை நேரத்தில், மாணவர்களுக்கு குடிநீர், டீ, பிஸ்கெட் மற்றும் கலவை சாதம் தினமும் வழங்கப்படுகிறது.அந்த செலவுகள் அனைத்தும், பள்ளி ஆசிரியர்கள், கல்வி மேலாண்மை குழுவினர் பகிர்ந்து கொள்கின்றனர். விரைவில், பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்பு துவங்க திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை