மேலும் செய்திகள்
சிறுபான்மையினருக்கு குறைந்த வட்டியில் கடனுதவி
04-Jun-2025
சிறுபான்மையினர் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
25-May-2025
குபேரா - டிரைலர்
16-Jun-2025
திருவள்ளூர், 'டாப்செட்கோ' மற்றும் 'டாம்கோ' நிறுவனம் வாயிலாக, சிறப்பு கடன் வழங்கும் முகாம், தாலுகா அலுவலகங்களில் நாளை துவங்குகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகமான, 'டாப்செட்கோ' மற்றும் 'டாம்கோ' வாயிலாக தனிநபர், குழு, கறவை மாடு, சுய உதவிக் குழுக்களுக்கான சிறு கடன் திட்டம், கல்விக்கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மக்கள் பயன்பெறும் வகையில், குறிப்பிட்ட தேதிகளில் தாலுகா அலுவலகங்களில் கடன் வழங்கும் முகாம் நடக்கிறது. முகாமில் பங்கேற்று கடன் விண்ணப்பத்தை பெற்று பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
04-Jun-2025
25-May-2025
16-Jun-2025