மேலும் செய்திகள்
மே 30 முதல் ஜூன் 6 வரை மீன்பிடி படகுகள் ஆய்வு
16-May-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வகை மீன்பிடி நாட்டு படகுகள், வரும் 10ம் தேதி சிறப்பு குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில், மீன்பிடி தடைகாலத்தில், அனைத்து வகை மீன்பிடி நாட்டு படகுகளை, வரும் 10ம் தேதி சிறப்பு குழு வாயிலாக நேரடி ஆய்வு செய்யப்பட உள்ளது. ஆய்வுக்கான முன்னேற்பாடு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அனைத்து நாட்டுப்படகு உரிமையாளர், மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர் மற்றும் மீனவ கிராம நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.ஆய்வின் போது, நாட்டு படகு உரிமையாளர்களின் ஆதார் அட்டை, படகு பதிவு சான்றிதழ், டீசல் மானிய அட்டை, குடும்ப அட்டை மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வாயிலாக வழங்கப்பட்ட தொலைதொடர்பு சாதனங்கள், உயிர்காப்பு கவச உடைகள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.ஆய்விற்கு உரிய ஆவணங்களுடன் உட்படுத்தப்படாத நாட்டுப்படகிற்கு மானிய டீசல் உடனடியாக நிறுத்தப்படுவதுடன், படகின் பதிவு ரத்து செய்யப்படும். அன்றைய தினம், திருவள்ளூர் மாவட்டத்தில் மீன்பிடி நாட்டுப்படகுகளை மீன்பிடிக்க எடுத்து செல்லாமல், ஆய்வுக்கு உட்படுத்தி ஒத்தழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
16-May-2025