உங்களுடன் ஸ்டாலின் முகாம் 872 மனு ஏற்பு
மேல்நல்லாத்துார்:'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், 498 மகளிர் உரிமைத்தொகை மனுக்கள் உட்பட 872 மனுக்கள் பெறப்பட்டன. கடம்பத்துார் ஒன்றியம் மேல்நல்லாத்துாரில் நேற்று, ஒன்றிய அலுவலர்கள் சவுந்தரி, நடராஜன் தலைமையில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், திருவள்ளூர் எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் பங்கேற்று மனுக்களை பெற்றார். இந்த முகாமில், 872 மனுக்கள் பெறப்பட்டன.