உங்களுடன் ஸ்டாலின் முகாம் எம்.எல்.ஏ., ஆப்சென்ட்
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் புதுப்பட்டு ஊராட்சியில் நேற்று நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமில், 883 மனுக்கள் பெறப்பட்டன. தி.மு.க., - எம்.எல்.ஏ., வராதது, பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடம்பத்துார் ஒன்றியம் புதுப்பட்டு ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருப்பந்தியூர், புதுப்பட்டு, கொட்டையூர் ஆகிய ஊராட்சிகளில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடந்தது. கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சவுந்தரி, நடராஜன் ஆகியோர் தலைமையில் நடந்த முகாமில், அரசு அதிகாரிகள் பங் கேற்று மனுக்களை பெற்றனர். இந்த முகாமில், திருவள்ளூர் எம்.எல்.ஏ., - ராஜேந்திரன் பங்கேற்காதது, பகுதிமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதில், 465 மகளிர் உரிமைத்தொகை உட்பட, மொத்தம் 883 மனுக்கள் பெறப்பட்டன.