மேலும் செய்திகள்
பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
15 minutes ago
இடியும் நிலையில் நிழற்குடை பேருந்து பயணியர் அச்சம்
17 minutes ago
மீனவர்களின் வாரிசுதாரருக்கு போட்டி தேர்வுக்கு பயிற்சி
17 minutes ago
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமில், 12,427 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தாலுகாக்களில், 526 ஊராட்சிகள் உள்ளன. மாவட்டம் முழுதும் தமிழக முதல்வரின் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம், கடந்த ஜூலை 14ம் தேதி துவங்கி, நவம்பர் 14ம் தேதி நிறைவடைந்தது. இதில், மொத்தம் 49,001 மனுக்கள் பெறப்பட்டன. அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், மக்கள் விண்ணப்பிக்கும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். முகாமில் வருவாய், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், வேளாண்மை, கால்நடை, குடிநீர், கூட்டுறவு என, 13 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று மனுக்களை பெற்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுதும் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமில், மொத்தம் 49,001 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 14,149 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. 22,425 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 12,427 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில், வருவாய்த்துறையில் மட்டும் 32,066 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், 5,212 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. 19,708 மனுக்களுக்கு விசாரணை நடந்து வருகிறது. 7,146 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. முகாம்கள் பெறப்பட்ட மனுக்கள் தீர்வு காணப்பட்டவை விசாரணையில் உள்ளவை தள்ளுபடி செய்யப்பட்டவை முதல் கட்டம் 23,001 7,135 8,782 7,084 இரண்டாம் கட்டம் 11,865 3,420 5,255 3,190 மூன்றாம் கட்டம் 8,784 2,617 4,513 1,654 நான்காம் கட்டம் 5351 977 3,875 499 மொத்தம் 49,001 14,149 22,425 12,427
15 minutes ago
17 minutes ago
17 minutes ago