உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஒரு தடத்தில் மட்டும் வாகன சோதனை எளாவூரில் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து

ஒரு தடத்தில் மட்டும் வாகன சோதனை எளாவூரில் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து

கும்மிடிப்பூண்டி:சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் பகுதியில், ஆந்திர எல்லையை ஒட்டி, தமிழக அரசின் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி இயங்கி வருகிறது.அந்த சோதனைச்சாவடியில், தமிழகத்தில் இருந்து, ஆந்திரா நோக்கி செல்லும் வாகனங்களுக்காக ஆறு தடங்களும், ஆந்திராவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கு, 10 தடங்களும் உள்ளன.போக்குவரத்து துறையில், ஆள் பற்றாக்குறை காரணமாக, அனைத்து தடங்களும் அடைத்து, ஒரே ஒரு தடம் வழியாக, கனரக வாகனங்களை அனுமதித்து, ஒவ்வொரு வாகனங்களாக, போக்குவரத்து துறையினர், ஆவணங்களை சோதனை செய்து வருகின்றனர்.இதனால், சோதனைச்சாவடியில் நீண்ட வரிசையில் கனரக வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் சரக்கு வாகனங்ளின் போக்குவரத்து ஸ்தம்பிப்பதால், குறித்த நேரத்தில் சென்றடைய முடியாத நிலை ஏற்படுகிறது.சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள், போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று தடங்கள் வழியாக கனரக வாகனங்களை அனுமதித்து ஆவணங்களை சோதனை செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை