உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் ஊத்துக்கோட்டையில் அவதி

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் ஊத்துக்கோட்டையில் அவதி

ஊத்துக்கோட்டை: குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால், கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஊத்துக்கோட்டை பேரூராட்சி, எம்.ஜி.ஆர். நகர், 1வது குறுக்குத் தெருவில், 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. வளர்ந்து வரும் இப்பகுதியில் சாலை வசதி செய்யப்படவில்லை. சமீபத்தில் மோந்தா புயல் காரணமாக ஊத்துக்கோட்டை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் எம்.ஜி.ஆர். நகர், 1வது குறுக்குத் தெருவில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதில் கொசுக்கள் உருவாகி, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் இனியும் மெத்தனமாக இல்லாமல், உடனடியாக நடவடிக்கை எடுத்து, குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை அகற்ற வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை