உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தவறி விழுந்த தொழிலாளி பலி

தவறி விழுந்த தொழிலாளி பலி

கும்மிடிப்பூண்டி:உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அயன், 22. கவரைப்பேட்டை அடுத்த, தண்டலச்சேரி கிராமத்தில் உள்ள தனியார் இரும்பு கம்பி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஒப்பந்த பணியாளராக, கூரை சிமென்ட் ஷீட் மாற்றும் வேலையில் நேற்று ஈடுபட்டிருந்தார்.ஷீட் ஒன்று உடைந்து, 30 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். படுகாயங்களுடன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ