உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆக்கிரமிப்பு அகற்ற போராட்டம்

ஆக்கிரமிப்பு அகற்ற போராட்டம்

பொன்னேரி,சோழவரம் அடுத்த கொடிப்பள்ளம் கிராமத்தில் கால்வாய் மற்றும் வண்டிபாதையை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதாகவும், அவற்றை அகற்றக்கோரி மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை எனக்கூறி நேற்று, கிராமவாசிகள் சிலர் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த பொன்னேரி போலீசார் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.போராட்டத்தை கைவிட மறுத்ததை தொடர்ந்து போலீசார் அவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றனர்.பொன்னேரி தாசில்தார் மதிவாணன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தார். ஒரு வாரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதை ஏற்று கிராமவாசிகள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை