உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாணவர்கள் போதைக்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்: டி.எஸ்.பி.,

மாணவர்கள் போதைக்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்: டி.எஸ்.பி.,

திருத்தணி:திருத்தணி, அனுமந்தபுரம் சுடுகாடு அருகே மரங்கள் நிறைந்த அடர்ந்த பகுதியில் பள்ளி சீருடையில் மாணவர்கள் வந்து,கஞ்சா அடிப்பதும், சிகரெட் பிடிப்பது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் அங்கு சென்று பார்த்த போது ஆல மரத்தின் கிளைகளில் புடவைகள் ஆங்காங்கே ஊஞ்சல் கட்டி இருந்தனர். மேலும் கஞ்சா துகள்கள், சிகரெட்,கஞ்சா புகைப்பதற்கு தேவையான பொருட்கள் சிதறி கிடந்தன.இது குறித்து அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். திருத்தணி போலீசார் மேற்கண்ட இடத்தில் சோதனை செய்த போது, அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்தில் ஆளாகி வந்து செல்வதும் விசாரணையில் தெரிய வந்தது.அதை தொடர்ந்து, திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், திருத்தணி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஒரு சில மாணவர்கள் தவறான செயல்களில் ஈடுபடுவது தகவல் வந்துள்ளது.குற்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் குறித்து விபரங்கள் சேகரித்து விசாரணை நடத்த உள்ளோம். அந்த மாணவர்கள் மீதும் கடும் நடவடிக்கை பாயும்.மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல், படிப்பில் கவனம் செலுத்தி வாழ்க்கையில் உயர்ந்த பதவிகள் பெற வேண்டும்.இவ்வாறு டி.எஸ்.பி., அறிவுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி